மட்டக்களப்பில் ஒரு நாளில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் ஏட்டிக்கு போட்டியாக இரு இராஜாங்க அமைச்சர்கள் கூட்டம் அரச அதிகாரிகள் திக்குமுக்காட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு இராஜாங்க அமைச்சர்கள் இரு வௌ;வேறு இடங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் அபிவிருத்தி  தொடர்பான கூட்டங்களை நடாத்தியதால் அரச அதிகாரிகள் எந்த கூட்டத்துக்கு சமூகமளிப்பது என தெரியர்து  திக்கு முக்காடிய சம்பவம் தொடர்பாக புத்திஜீவிகள் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்தனர்.

விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு கூட்டம் நேற்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மண்டபத்தில் கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையிலும்

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்றைய தினம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் வர்த்தக இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் காலை 9.00 மணிக்கு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக மண்டபவத்தில் இடம்பெற்றது

இந்த இரு வௌ;வேறு பிரதேசத்தில் ஒஆர நாளில் ஒரே நேரத்தில் இரு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களை இரு இராஜாங்க அமைச்சர்களும் ஏட்டிக்கு போட்டியாக நடாத்தியனால் சம்மந்த பட்ட அரச அதிகாரிகள் எந்த கூட்டத்திற்கு சென்று சமூகமளிப்பது என திண்டாடியதுடன் ஏதோ ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டது

ஏன் இவ்வாற ஏட்டிக்கு போட்டியாக யாருடைய தேவைக்காக அவசரமாக இவ்வாறு இரு கூட்டங்களை நடர்துவதற்கான காரணம் என்ன? இந்த கூட்டங்கள் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகவா? அல்லது அரசியல் வாதிகளின் தேவைக்காகவா? என்ற கேள்வி எழுகின்றதுடன் குறித்த ஒரு கூட்டத்திற்கு சம்மந்தப்பட்ட அதிகாரி கலந்து கௌ; வில்லை எனில் எவ்வாறு தீர்வு காணமுடியம்;.

எனவே ஏன் மக்களின் வரிப்பணத்தின் ஊடாக பெற்ற பணத்தை இவ்வாறு அரச அதிகாரிகள் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களை நடாத்தி ஏனைய அதிகாரிகள் பொது மக்களின் நேரங்களையும் பணத்தையும் வீனடிப்பது எதற்காக? என்ற கேள்வி எழுந்து நிற்கின்றதுடன் ஏதாவது ஒரு கூட்டத்தை முறையாக நடாத்தி மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காப்பதற்கு திட்டமிட்டிருக்கவாம் ஆனால் இவ்வாறு கூட்டங்களையே திட்டமிட்டு செயற்படுத்த முடியாத அரச நிர்வாகமும் அரசியல்வாதிகளும் எவ்வாறு மக்களுக்கு தீர்வு பெற்று தரமுடியம்.

இவ்வாறே அண்மை காலமாக மாவட்டத்தில் அபிவிருத்தி குழு கூட்டமே அல்லது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமே நடைபெறும் போது அங்கு மக்களின் உண்மையான பிரச்சனைகளை உள்வாங்காது ஆளும் கட்சி எதிர்கட்சி அரசியல் வாதிகளுக்கிடையே கூட்டத்துக்கு சம்மந்தம் இல்லாது பிரச்சனைகளை தமது சுயநல அரசியலுக்காக வெறும் ஆக்கிரோசமாக இரு தரப்பும் பேசி சண்டை பிடிப்பதால் கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிடும்.

இதனால் குறித்த கூட்டத்துக்கு  கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றம் கிரம அபிவிருத்தி கமநல சங்கங்கள் மீன்பிடி சங்கங்கள் போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமது பிரதேசம் தொடர்பான குறைகளை  முன்வைக்க முடியாது; துர்ப்பர்கிய நிலையில் வீடு திரும்பிய வேண்டியுள்ளது என கடும் விசனம் தெரிவித்தனர்.

எனவே எதிர்காலத்தில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே தான் இந்த அபிவிருத்தி குழுகூட்டம் என்பதை அரசியல்வாதிகள் அனைவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews