
கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு கடற்படையினர் சரமாரியாக கடத்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கே என் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இவ்வாறு கடப்படை தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சபையில் கலந்து கொண்டிருந்த மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரிடம் வினாவியை பிரதேச மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் கே என் டாக்டர் தேவனந்தா கடற்படை மீது தாக்கல் நடத்த முற்பட்ட வேலை தாக்குதல் நடத்தியதாக தமது ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக அறிவித்தார்.

இது தொடர்பில் சபையில் வாத பிரதிவாதங்கள் ப கடுமையாக இடம் பெற்றது. இதே வேளை இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு கடற்படைக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்ததுடன் அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் அல்லது சந்தேகங்களை சட்டரீதியான நடவடிக்கைக்கு முன் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

