
சங்கானை சிவப்பிரகாச வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு இன்றையதினம் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் முதல்வர் திரு.இ.சிறீதரன் அவர்களது தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
விருந்தினர்கள் மேற்கத்தேய வாத்திய இசை முழங்க அழைத்து வரப்பட்டு கொடியேற்றும் நிகழ்வே இடம்பெற்றது. அதனையடுத்து விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் வலயக் கல்வி அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



