யாழ். மாவட்டத்தில் பன்றி நெல், களைநெல் தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பான நடமாடும் விழிப்புணர்வு கருத்தரங்கு விவசாயிகள் ஒன்றுகூடும் இடங்களில் விவசாயத்திணைக்களம், கமநல் அபிவிருத்தி திணைக்களத்தின் நடாத்தப்படவுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,
யாழ். மாவட்டத்தில் நெற்செய்கையானது ஏறத்தாழ 12500 ஹெக்ரேயர் விஸ்தீரணத்தில் மானாவாரியாக மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் ஆடி மாதத்தில் முதலாவது மழையுடன் விவசாயிகள் நிலம்பண்படுத்தலை மேற்கொண்டு செப்ரம்பர் மாதத்தில் புழுதி விதைப்பை மேற்கொள்கின்றனர்.
யாழ். மாவட்டத்தில் கடந்த காலபோகங்ளில் பன்றி நெல்லின் தாக்கமானது மறவன்புலவு, சாவகச்சேரி, மாசியப்பிட்டி, கந்தரோடை, அளவெட்டி, கரவெட்டி என பல பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டது.
இப்பன்றி நெல்லின் தாக்கத்தினால் நெல் விளைச்சல் மற்றும் தரம் குறைவடைந்திருந்தது. இப்பன்றி நெல் ஆனது உறங்கு நிலையில் 5 வருடங்கள் வரை மண்ணில் காணப்படக்கூடிய சாத்தியம் உள்ளது.
எனவே பன்றிநெல்லின் தாக்கத்தை குறைப்பதற்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
யாழ். மாவட்டத்தில் பன்றி நெல், களைநெல் தாக்கத்தினை கட்டுப்படுத்துதல் தொடர்பான நடமாடும் விழிப்புணர்வு கருத்தரங்கு விவசாயிகள் ஒன்றுகூடும் இடங்களில் விவசாயத்திணைக்களம், கமநல் அபிவிருத்தி திணைக்களத்தின் நடாத்தப்படவுள்ளது.
வட மாகாண ஒருங்கிணைவுடன் முதவாவது ஆரம்ப நிகழ்வானது சாவகச்சேரி கல்வயலில் 19.06.2023 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் ஆரம்பமாவுள்ளது. குறித்த நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் கீழ்வரும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
19.06.2023 மு.ப 9.30 சாவகச்சேரி, பி.ப 2.00 கைதடி
20.06.2023 மு.ப 9.30 கரவெட்டி, பி.ப 1.00 புலோலி, பி.ப 3.00 அம்பன்
21.06.2023 மு.ப 9.30 புத்தூர், பி.ப 1.00 உரும்பிராய், பி.ப 3.00 நல்லூர்
22.06.203 மு.ப 9.30 அளவெட்டி, பி.ப 2.00 தொல்புரம்
23.06.2023 மு.ப 9.30 உடுவில், பி.ப 2.00 சண்டிலிப்பாய்
என குறிப்பிட்டுள்ளார்.