இருண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்றுமுன் தினம்(16) குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளது. அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வெளியில் சென்றிருத்த வீட்டின் உரிமையாளர் மதியம் 1 மணியளவில் வீட்டிற்கு திரும்பியருந்த போது வீட்டின் கதவு உடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அலுமாரி லாஜ்ஜில் வைக்கப்பட்டிருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாலை 4:30 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய கே.விமலவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஒரு மணித்தியாலத்திற்குள் சந்தேகநபரை கைது செய்து , நகைகளையும் மீட்டுள்ளனர்.
தனியார் நிதிநிறுவனத்தில் தாலிக்கொடி 3 3/4 பவுண் அடைவு வைத்து 3 இலட்சம் பணத்தைப் பெற்றுள்ளனர். 292000பணத்தை மீட்டுள்ளதுடன் மகுதி நகை 2 3/4 பவுண் நகைகளை பிறதொரு வீட்டின் பூச்சாடியின் கீழ் வைத்திருந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் மற்றும் மீட்க்கப்பட்ட நகைகள் என்பன இன்று பருத்தித்துறை நீதிமன்றல் முற்படுத்த நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை.