
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
குறித்த வீட்டில் 63 வயதுடைய பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவரின் வீட்டினை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் அவரை மிக மோசமாக தாக்கி, வீட்டில் உள்ள நகைகளை தருமாறு துன்புறுத்தினர். அதன்பின்னர் வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடி 19 பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் வயோதிப பெண்மணியின் காதில் இருந்த தோட்டினையும், மிரட்டி பறித்துச் சென்றுள்ளனர்.

இதன்போது தாக்குதலுக்கு உள்ளான வயோதிப பெண் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து இளவாவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு விரைந்த தடயவியல் பொலிஸார் கொள்ளையர்களுடையது என சந்தேகிக்கப்படும் மாதிரிகளை பெற்று சென்றுள்ளனர்.



