சிறைகளில் காணப்படும் ‘ஜேமரால்’ அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு

சிறைகளில் காணப்படும் தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் ‘ஜேமர்’ கருவியால் சிறைச்சாலைகளின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சமிக்ஞை செயற்படவில்லை என தெரியவந்துள்ளது.

ஜூன் 09ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் இது தெரியவந்துள்ளது.

சிறைச்சாலைகளில் தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் பொறுப்பு தற்போது இராணுவத்தினரிடம் காணப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இராணுவத்தின் சமிக்ஞைப் படையினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட பகுதிக்கு மாத்திரம் மிகவும் துல்லியமாக செயற்படும் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்த நாடுகளில் காணப்படுவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதற்கமைய, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு குழு ஆலோசனை வழங்கியதாக இலங்கை நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.

பொதுக் கணக்குக் குழுவில் சிறைச்சாலைகளில் கைதிகளின் திறன் 250% அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பெறுமதி பொதுவாக 259% எனவும் சில சிறைச்சாலைகளில் 300% – 400% அதிகரிப்பு காணப்படுவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் 11,762 கைதிகளுக்கு மாத்திரமே இடவசதி காணப்படுகின்ற நிலையில், தற்போது 26,791 கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளதாக நீதியமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறைச்சாலைகளில் உள்ளவர்களின்  உடல் மற்றும் பொருட்களை சோதனை செய்ய பயன்படுத்தப்படும் 11 இயந்திரங்களில் 4 இயந்திரங்கள் செயற்படவில்லை என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews