நன்னீர் மீன்பிடியாளர் தொழில் மேம்பாடு கருதி வடமாகண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவினரால் நன்னீர் மீன் குஞ்சுகள் விடப்பட்டன…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் களப்பு பகுதியில் 75,000 மீன் குஞ்சுகள் இன்றைய தினம் விடப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி  பிரிவின் நிதி அனுசரணையில் குறித்த மீன் குஞ்சுகள் அம்மன் பகுதியில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும்  சுமார் 500 வரையான நன்னீர் மீன்பிடியாளர்களின் தொழில் மேம்பாட்டினை   கருத்தில்  கொண்டு 250000 மீன் குஞ்சுகள் விடும் திட்டத்தின் கீழ்  75,000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
   மிகுதி மீன் குஞ்சுகள்  இன்றிலிருந்து தொடர்ச்சியாக நன்னீர் ஏரியில் விடப்படவுள்ளன.
 இந்நிகழ்வில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவு அதிகாரிகள்,  பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்க,  அம்பன் நன்னீர் மீன்பிடியாளர் சங்க பிரதிநிதிகள்,  மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews