
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பல ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளளன.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பெண்ணொருவர் ஆலயத்திற்கு வருகை தந்து, மோட்டார் சைக்கிளை ஆலயத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துவிட்டு சுவாமியை தரிசிப்பதற்காக உள்ளே சென்றார்.
இதன்போது அவ்விடத்திற்கு வந்த நபரொருவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குருக்களின் மோட்டார் சைக்கிளை திருட்டு திறப்பு மூலம் திறக்க முயற்சித்துள்ளார். அது பலனளிக்காமல் போக, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணுடைய மோட்டார் சைக்கிளை திறந்து, அதில் இருந்த 80 ஆயிரம் ரூபா மதிக்கத்தக்க தொலைபேசி, ஒரு தொகை பணம், தேசிய அடையாள அட்டை உட்பட முக்கிய ஆவணங்களையும் திருடிச் சென்றுள்ளார்.

இது குறித்து அந்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையிலும் வட்டுக்கோட்டை பொலிஸார் இதுவரை திருடனை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.