
அராலி மேற்கு நீலத்திக்காடு ஸ்ரீ பேச்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது நேற்றையதினம் செவ்வாய்கிழமை வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.

நேற்று மதியம் அம்பாளின் திருவிழா ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து இரவு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் எதிர்வரும் 7ஆம் திருவிழா அன்று வேட்டைத் திருவிழா இடம்பெற்று, 9ஆம் நாள் வேள்வி உற்சவத்துடன் திருவிழாவானது இனிதே நிறைவடையும்.
ஆலயத்தின் அனைத்து கிரியைகளும், ஆலயத்தின் பிரதம குருவான துஷ்யந்த குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்களினால் நடாத்தப்படும்.
நேற்று ஆரம்பமாகிய இந்த உற்சவத்தில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் அம்பாளை தரிசித்து, இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.