
யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது,
யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
யாழ் இந்திய துணைத் தூதுவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டஒன்பதாவது சர்வதேச யோகா நாள் நிகழ்வில் யோகா பயிற்சி வழங்கி வைக்கப்பட்டது யோகா பயிற்சியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டதோடு
யோகா பயிற்சி நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் கல்வியிலாளர்கள் என பலரும் யோகாசன பயிற்சியில் கலந்து கொண்டனர்.