சர்வதேச யோகா தினத்தையொட்டி Vanni Hope Australia நிறுவனத்தின் நிதி உதவியில் Trinco Aid நிறுவனத்தோடு இணைந்து திருமலை வளாக கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவபீடம் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நேற்று நடைபெற்றது.
கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக துணைத் தலைவர் (திருமதி) சந்திரவதனி ஜி.தேவதாசன் தலைமையில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்திற்கு முன்னால் நேற்று காலை 7.45 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபவனி தபாலக சந்தி வீதி வழியாகச் சென்று திருகோணமலை நகரசபைக்கு முன்னால் முடிவுற்றது.
இந்த விழிப்புணர்வு நடைபவனியில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், Trinco Aid இன் பணிப்பாளர் திருமதி. தயாளினி ஹரிகரன், கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சுதேச மருத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சித்த மருத்துவபீட மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி முடிவில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நன்னாரி பானம், மோர், கடலை ஆகியன யோகா நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.