
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்றிரவு வாள்களுடடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு வாள்களை எடுத்துச் சென்றபோது வீதியில் வைத்து, மானிப்பாய் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.