15 வருடங்களுக்கும் மேலாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 வயதான கனகசபை தேவதாசன் என்பவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான தேவதாசன் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
புறக்கோட்டை ரயில் நிலையத்தில் அந்த ஆண்டு நடந்த தற்கொலை தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேவதாசனுக்கு 2017ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதனைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட தேவதாசன், தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி பல்வேறு வகையில் போராட்டங்களை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.