
21 வீணைகள் மூலம் இசை கச்சேரி இசைத்து வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை சாதனை வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 21 வீணைகள் மூலம் இசை கச்சேரி இசைத்து வடமகாணத்திலே நேற்றைய தினம் சாதனை நிகழ்த்தியுள்ளனர். இலங்கையில் முதலாவதாக சில வருடங்களுக்கு முன்பு கொழும்பு தமிழ்ச் சங்கம் 76 வீணைகளை வைத்து இசை கச்சேரி நிகழ்த்தி சாதனை படைத்திருந்தது. வட மாகாணத்தில் நேற்றைய தினம் 21 வீணைகள் மூலம் இசை கச்சேரி இசைத்து வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது