
கேகாலை பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில், கடந்த 01/07/2023 அன்று,
இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கம் தேசிய பளுதூக்கல் போட்டியை நடாத்தியது.
இந்த தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றது.



அந்தவகையில் செல்வி வி. ஜெஸ்மினா 18 வயதுப்பிரிவு 71கிலோ எடைப்பிரிவில் 92 கிலோகிராம் இனை தூக்கி தங்கப்பதக்கமும், செல்வி இ.றம்மியா 20 வயதுப்பிரிவு 55 கிலோ எடைப்பரிவில் 65 கிலோகிராம் இனை தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்கள்.
யாழ். மண்ணிற்கும், பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடித்தந்த இந்த மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.