
சுகாதார அமைச்சின் மத்திய ஒளடத களஞ்சியத்தில் 800 மருந்துகளில் 190 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலைகளில் 90க்கும் குறைந்த மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒளடத தரவு கட்டமைப்பில் சில மேம்படுத்தல்கள் பணிகளை, முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எனவே, அது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தெரிவித்துள்ளார்.