
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 28 வயதுடைய அதே இடத்தை சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 30 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.