
இன்று 12.00 மணி அளவில், மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியின் உரிமையாளன் தனது காணியில் குழி வெட்டிய போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருந்ததை அவதானித்தார். இந்நிலையில் அவர் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
அதனடிப்படையில் அங்கு சோதனையிட்டபோது 4 T56 ரக ஆயுதங்கள், தோட்டாக்கள், 9 T56 ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த ஆயுதங்களையும் தோட்டாக்களையும் மீட்ட மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.