
மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி – வத்துகாமம், மடுல்கலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் தேநீர் பருகிக்கொண்டிருந்த சமயம் அவருக்கு மேல் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த மற்றுமொரு தொழிலாளி கால் முறிந்த நிலையில் வத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.