அரசுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால், அதன்பின்னர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படலாம் எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் இணைந்து செயற்பட தயாரில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல்வாதிகள் உள்ள தற்போதைய அரசை பாதுகாப்பதற்கு தமது அணி தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.