சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவன முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பகுதிநேர மாணவர்கள் நஜா பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையுடன் சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் முன்பாக பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (04) திறந்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்விநிறுவனத்தின் (ஏ.ரி.ஜ) பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபாவின் ஆலோசனையின் கீழ் நஜா பவுண்டேசன் அமைப்பின் நிதியுடன் முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பகுதிநேர மாணவர்கள் புதிய பஸ் தரிப்பிடம் நிர்மானித்தனர்.
இந்த பஸ் தரிப்பிட திறப்பு விழா நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை உயர் தொழி நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் .எல் எம் ஹனிபா, சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எச்.எம.;நவாஸ், நஜா பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எஸ்.எம் நபீல், சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்விநிறுவனத்தின் ஆங்கிலகற்கை துறை பொறுப்பாளர் எம்.பி நௌசாட், கணக்கியல் துறை பொறுப்பாளர் பெரோஸ், தகவல் தொழில்நுட்பதுறை பொறுப்பாளர் ஏ.ஏ.எம். மதீஹ் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சம்பிராஜ பூர்வமாக நாடாலெட்டி பாவனைக்கு திறந்துவைத்தனர்.
இதேவேளை இது முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள சமூக பொறுப்புணர்வுகுறித்த குழுசெயற்திட்டத்திற்கு ஏற்ப இவ் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.