
யாழ்ப்பாணம் – வரணி சுட்டிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த குடும்பஸ்தர் நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு, வடமராட்சி தேவரையாளி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற வேளை, மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய புஸ்பராசா ராஜ்குமார் என்ற இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.