
வடமராட்சி கல்வி வலையத்திற்க்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான் விளையாட்டு போட்டிகள் மிக சிறப்பாக இடம் பெற்று வருகிறது.
கடந்த வாரம் ஆர்மபிக்கப்பட்ட விளையாட்டு போட்டியின் இரண்டாம் கட்டமாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாளாக இடம் பெற்று வருகிறது.
வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் தலமையில் இடம் பெறும் குறித்த விளையாட்டு போட்டியில் வடமராட்சி வலயத்திற்க்கு உட்பட்ட பாடசாலைகளின் வீர வீராங்கனைகள் மிகுந்த உற்சாகத்தோடு போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர்.






