மண்டைதீவு – தூமையார் ஆலய கிணற்றில் 60 க்கும் மேற்பட்டோரின் சடலங்களை மீட்கலாம் – சி.சிறீதரன்.. |

யாழ்.அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றையும் துப்புரவு செய்தால் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும்.

இதன் காரணமாகவே இலங்கை இராணுவத்தினர் அந்த இடத்தில் உள்ள மக்களின் காணிகளை பறிக்க முயற்சிக்கின்றார்கள் என்றார்.

மண்டைதீவில் சதாசிவம் செந்தில் மணி, வைரவநாதன் மகேஸ்வரி உள்ளிட்ட பலரின் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக கைப்பற்றியுள்ளனர்.

இதனால் அந்த காணிகளுக்கு சொந்தக்காரர்கள் இலங்கையின் பல பகுதிகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். நல்லிணக்கம் பேசும் அரசாங்கம்,

சமாதானம் பேசும் அரசாங்கம் இப்பொஐழுதும் அவர்களின் காணிகளை பரிக்க முயற்சிக்கின்றமை மிக மோசமான செயலாகும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews