
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனுடைய தங்க நகையை கொள்ளையடித்து சென்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சி என்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட தங்க நகையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் கூரிய ஆயுதத்தை காண்பித்து அச்சுறுத்தி அவரிடமிருந்து சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கொழும்பு தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்