
22 ஆண்டுகள் அரசியல் கைதியாக சிறையிலிருந்து அண்மையில் விடுதலையான பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்கள். 

இதன்போது தான் சிறையில் இருந்து விடுதலையாவதற்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்ததற்கும் சிறையில் பலதடவைகள் தன்னை நேரில் வந்து நலம் விசாரித்ததற்கும் ரகுபதி சர்மா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணனியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் இ.தயாபரன், முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.