
நேற்றையதினம் (08/07/2023) முற்பகல் 11.30 மணி அளவில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி – தச்சந்தோப்பு என்ற இடத்தில் காணியை சுத்தப்படுத்தும் போது மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணற்றினை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும் போது இவ்வா மோட்டார் குண்டுகள் இருப்பது அவதானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதற்கமை குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


