
வீடொன்றில் பெளத்த தேரருடன் தனிமையில் இருந்த தாய் மற்றும் மகளை நிர்வாணப்படுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 8 பேரையும் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக் கூறப்படும் யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோரை குழு ஒன்று தாக்கியிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 8 பேரையும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், முறைப்பாடு செய்தவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தமது தரப்பு விரும்புவதாக நீதிவானிடம் கேட்டனர்.
குறித்த முறைப்பாடுகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்தில் வீடு ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் இளம் பெண்ணும் தாயும் இருந்தபோது பலவந்தமாக அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்கள், தாய், மகள் இருவரையும் தாக்கிய குற்றச்சாட்டில் நவகமுவ பொலிஸார் கைது செய்திருந்தனர்.