
கிளிநொச்சி வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையை கிளிநொச்சி மருத்துவமனையிடமிருந்து கோரியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனகசந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.