மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் சரத் வீரசேகரவின் கருத்தை கண்டித்து பணி பகிஷ்கரிப்பு ஆர்ப்பாட்டம்..!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதிகளை எச்சரித்து வெளியிட்டுள்ள கருத்தைக்  கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (11)  பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த தில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் நீதிபதிகளை எச்சரித்து தெரிவித்த கருத்தை கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி போ. பிறேமநாத்த பணிபகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னால் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள், மற்றும் மட்டு நீதிமன்ற கட்டிடத் தொகுதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் நீதிதுறை சுதந்திரத்திற்காய் குரல்கொடுப்போம், நீதிதுறை சுதந்திரத்தை உறுதி செய், நீதிதுறைக்கு அரசியலல் தலையீடு வேண்டாம்.

நீதிதுறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூண் ஆகும், நீதிதுறையில் இனவாதத்தை கலக்காதே, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews