
மல்லாவி – பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.