
வெடுக்குநாறி மலையில் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கிண்டல், மற்றும் பாராளுமன்றில் நீதிபதியையும், நீதி துறையையும் அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை ஆகியவற்றை கண்டித்து இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இதே வேளை பாராளுமன்ற உறுப்பினர் சேகர வீரசேகர நீதிபதியை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை, மற்றும் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தமையை கண்டிப்பதாகவும் பருத்தித்துறை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் சட்டத்தரணி நடராசா ராஜீவன் தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றைய தினம் இடம் பெறவேண்டிய அனைத்து வழக்குகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளன.