
சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிறுவனத்தில் மனித உரிமைகள் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேலு கனகராஜ், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் றுக்கி பெர்ணன்டோ மற்றும் அருட்தந்தை ரொனால்ட் சுஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.