மலையகம் -வடக்கு கிழக்கிற்கு உறவிற்கு வடக்குக் கிழக்கு நிலை நின்று கோட்பாட்டு ரீதியாக பாரிய பங்களித்தவர்கள் தமிழரசுக் கட்சியினர் தான.; 1949ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவான போதே தோற்றம் பெற்ற இப் பாரம்பரியம் தமிழர் கூட்டனி காலத்தில் இன்னோர் பரிமாணத்தை அடைந்தது எனலாம். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முப்பெரும் தலைவர்களில் ஒருவராக தொண்டமானும் தெரிவுசெய்யப்பட்டார்.
1972ஆம் ஆண்டு தமிழர் கூட்டனி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் கூட்டணி தமிழர் விடுதலைக் கூட்டணியாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட போது தந்தை செல்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் முப்பெரும் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இதே மாநாட்டில் தனிநாட்டுப் பிரகடனமும் விடுக்கப்பட்டது.1977ஆம் ஆண்டுத் தேர்தல் தமிழ் ஈழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பாக கருதப்பட்டது. வடக்கு- கிழக்கு மாகாணங்களில் கல்குடா தேர்தல் தொகுதியைத் தவிர ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக்கூட்டனி வெற்றி பெற்றது. கல்குடா தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட டபிள்யு.தேவநாயகம் வெற்றி பெற்றார். மலையகத்திலும் கொழும்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசை தமிழரசுக்கட்சி ஆதரித்தது.
மலையகத்தில் நுவரேலியா – மஸ்N;கலியா தொகுதியில் தொண்டமான் மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதே வேளை கொழும்பு மத்தி தொகுதியில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் செயலாளர் செல்லச்சாமி தோல்வியடைந்தார். நான்காவது இடமே அவருக்குக் கிடைத்தது. தொண்டமானின் வெற்றியால் 30 வருடங்களுக்குப் பின்னர் மலையகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது.
தமிழர் விடுதலைக் கூட்டனியின் தனி நாட்டுக் கோரிக்கை மலையகத்திற்கு ஏற்றதாக இருக்கவில்லை. அதை விட தொண்டமான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில்; கிராமிய அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றார். இதனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முப்பெரும் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார். இவ் விலகல் உத்தியோக பூர்வமாக இடம் பெற்றதாகத் தெரியவில்லை. முப்பெரும் தலைவர் பதவியிலிருந்து தொண்டமான் விலகினாலும் வடக்கு- கிழக்கு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க அவர் என்றும் தயங்கியதில்லை.
1980 களில் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெறத் தொடங்கியது. 1983 இனக்கலவரம் மிதவாத அரசியலுக்கும் ஆயுதப்போராட்ட அரசியலுக்கும்டையே ஒரு பிரிநிலைக் கோடாக இருந்தது எனலாம். 1984 ஆம் ஆண்டு 6வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் மிதவாத அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அ.அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் போன்றோர் இந்தியாவிடம் அடைக்கலம் புகுந்தனர். அரசியல் அரங்கு முழுக்க முழுக்க விடுதலை இயக்கங்களின் வசமாகியது. தமிழீழ விடுதலைப்புலிகள்( டுவுவுநு) தமிழீழவிடுதலை இயக்கம் (வுநுடுழு) தமிழ் ஈழமக்கள்விடுதலைக் கழகம் (Pடுழுவு) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நுPசுடுகு) ஈழப்புரட்சியமைப்பு (நுசுழுளு) என ஐந்து இயக்கங்கள் முன்னணியில் நின்றன
இவ் விடுதலை இயக்கங்களில்; இடதுசாரி அரசியலை முன்னெடுத்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் இயக்கங்கள் மலையக மக்கள் தொடர்பான நிலைப்பாட்டினை கோட்பாட்டு ரீதியாக முன்வைத்தன. இக்கோட்பாட்டின் பிதாமகன் ஈரோஸ் இயக்கத்தின் ஸ்தாபகர் இரத்தினசபாபதிதான். அவர் மலையகத்தையும் இணைத்த ஈழத்தை முன்னிலைப்படுத்தினார். ஈழப்போராட்டத்தின் முதன்மைச்சக்திகள் மலையகப் பாட்டாளிகள் என்றே குறிப்பிட்டார். ஈரோஸ் இயக்கத்தின் ஈழ வரைபடம் அக் காலத்தில் பலத்த வாதப்பிரதிவாதத்தையும் உருவாக்கியிருந்தது. ஈழத்தில் வாழ்கின்ற மக்களை ஈழவர்கள் எனவும் அது பிரகடனப்படுத்தியிருந்தது. ஈரோஸ் இயக்கத்திலிருந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நுPசுடுகு) உருவாகியது. அதுவும் மலையக்தை இணைத்த ஈழத்தையே பிரகடனப்படுத்தியது. ஆனாலும் ஈழத்தில் வாழும் மக்களை ஈரோஸ் இயக்கத்தைப் போல “ஈழவர்கள்” என்ற பெயரால் அது அழைக்கவில்லை. மாறாக “ஈழமக்கள்” என்ற பெயராலேயே அழைத்தது. விடுதலை இயக்கங்களில் ஈரோஸ் இயக்கமே மலையகத்தில் வலுவான கட்டமைப்புக்களைக் கொண்டிருந்தது. ஏனைய இயக்கங்களுக்கு வலுவான கட்டமைப்புக்கள் இருந்தது எனக் கூற முடியாது. தொலைத்தொடர்புக்கோபுரத் தாக்குல் உட்பட்ட பல தாக்குதல்களையும் ஈரோஸ் இயக்கம் மலையகத்தில் நடத்தியது. ஒப்பீட்டு ரீதியில் மலையகத்தில் இருந்து இளைஞர்கள் ஈரோஸ் இயக்கத்திலேயே அதிகளவில் இணைந்தனர். பல மலையக இளைஞர்கள் சிறை வாசமும் அனுபவித்தனர். 1989 ம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஈரோஸ் இயக்கத்தின் தேசியப்பட்டியலிருந்து மலையகத்தைச் சேர்ந்த இராமலிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்
இவ்விரு இயக்கங்களும் மலையக்தையும் இணைத்த ஈழத்தை பிரகடணப்படுத்தியிருந்தாலும் யதார்த்தம் வேறு வகையாக இருந்தமையினால் அக் கொள்கையில் உறுதியாக நின்றார்கள் எனக் கூற முடியாது. மலையக மக்கள் முன்னணியின் செயலாளராக இருந்த காதர் மலையகத்தை தனிப்பிரதேசமாக அடையாளப்படுத்தி “மோகனதாஸ்” என்ற பெயரில் எழுதிய “இருபதாம் நூற்றாண்டு அடிமைத்தனம்” என்ற நூலை ஈரோஸ் இயக்கமே வெளியிட்டிருந்தது. அந்நூலின் இறுதிப்பக்கத்தில் மலையகத்தை தனிப்பிரதேசமாக அடையாளப்படுத்திய மலையக வரைபடம் இருந்தது. அதில் வடக்கு– கிழக்கு மலையகத்துடன் இணைக்கப்படவில்லை.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் மலையகத்தையும் இணைத்த ஈழ வரைபடத்தில் உறுதியாக இருக்கவில்லை. காதர் மலையக மக்களுக்கென ஆயுத இயக்கம் ஒன்றை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கி இருந்தார். வடகிழக்கில் செயற்பட்ட அனைத்து இயக்கங்களிடமும் அவர் ஆதரவு கோரினார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதற்கு முழு ஆதரவு கொடுத்ததுடன் தன்னுடைய போராளிகளுடன் சேர்த்து அவர்களுக்கு பயிற்சியையும் வழங்கியது. மலையகத்திற்கான ஒரு ஆயுத இயக்கம் கட்டும் முயற்சியில் செயற்பட்டுக் கொண்டிருந்த போதே காதர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்தது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட போது காதரை தங்களின் போராளிகளில் ஒருவராகக் காட்டி ஈழமக்கள் புரட்சிகர முன்னணி அவரை விடுதலை செய்வித்தது.
புளொட் இயக்கம் மலையக மக்கள் பற்றி உறுதியான கொள்கை நிலைப்பாடுகளை வகுத்ததாகத் தெரியவில்லை எனினும் அதன் கொள்கை உருவாக்கிகளில் ஒருவராக இருந்த கௌரிகாந்தன் இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், மலையக மக்கள் என நான்கு தேசிய இனங்கள் உண்டு என்ற கருத்துக்கு ஆதரவாக இருந்தார். நான்கு தேசிய இனங்களுக்கும் அவரவர் தலைவிதியை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பது அவரது கொள்கையாக இருந்தது. சண்முகதாசனின் சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியை பின்னணியாகக் கொண்ட அவர் அண்மையிலேயே இந்தியாவின் தர்மபுரத்தில் மரணமானார். காதரும் சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியை பின்னணியாகக் கொண்டவர். கீழைக்காற்று இயக்கத்திலும் அவர்கள் இருவரும் பணி புரிந்தனர்.இலங்கை ஆசிரியர் சங்கத்திலும் முக்கிய தொழிற்சங்கவாதியாக பணியாற்றினார்.
எனினும் வடக்கு – கிழக்கில் குடியேறிய மலையக மக்கள் மத்தியில் அதிகம் பணியாற்றியது புளொட் இயக்கம் தான் வடக்கு , கிழக்கில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வாழ்ந்த மலையக மக்களுக்கு ஒரு சமூக அந்தஸ்தை அது பெற்றுக் கொடுத்தது எனலாம். வவுனியா நகரத்தை சிங்கள மயமாக்கத்தில் பாதுகாத்தவர்கள் மலையக மக்களே! போர்க்; காலத்தில் நகர் பகுதிகளில் இருந்த அரச காணிகளில் எல்லாம் புளொட் இயக்கம் மலையக மக்களை குடியேற்றியது. அரசாங்கத்திற்கு புளொட் இயக்கம் தேவைப்பட்டதால் அதன் குடியேற்ற முயற்சிகளை அது தடுக்க முன்வரவில்லை .
புளொட் இயக்கத்தின் ஆதரவு அமைப்பாக இருந்த “காந்தீயம்” அமைப்பு 1977 ம் ஆண்டு இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்களை குடியேற்றுவதில் அதிக அக்கறை காட்டியது. காந்தீய அமைப்பின் செயலாளர் மருத்துவர் இராஜசுந்தரம் இந்தச் செயற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டார். புளொட் இயக்கத்தின் முக்கியஸ்தராக இருந்த “சந்ததியார்” இம் முயற்சிகளுக்கு பக்கபலமாக நின்றார் காந்தீய அமைப்பில் பல இளைஞர்கள் இணைவதற்கு சந்ததிரியாரே காரணமாக விளங்கினார். புளொட் இயக்கம் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலைய தாக்குதலுக்கும், கிளிநொச்சி வங்கிக் கொள்ளைக்கும் காந்தீயப்பண்ணையிலிருந்தே சென்றது. காந்தீயம் அமைப்பின் பண்ணைகள் புளொட் இயக்கத்தின் உத்தியோகபற்றற்ற முகாம்களாக இருந்தன என கூறலாம். இக்கட்டுரையாளரும் ஒரு குறிப்பிட்ட காலம் “காந்தீயம்” அமைப்பில் பணியாற்றியதால் மலையக மக்கள் மத்தியிலான காந்தீயத்தின் பணிகள் பற்றி நேரடி அனுபவம் அவருக்கு இருந்தது. புளொட் இயக்கத்திலிருந்து மலையக வம்சாவழியினரான பாலச்சந்திரன் என்பவர் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இறுதியில் ஒரு அரசசார்பற்ற நிறுவனத்திற்கும் விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பை கவனமமாக பேணத்தவறியதால் காந்தீய அமைப்பு அழிவுற்றது. அதன்தலைவரான தலைவரான டேவிட்ஐயாவும், செயலாளரான இராஜசுந்தரமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மருத்துவர் இராஜசுந்தரம் 1983 வெலிக்கடை இல் சிங்களக் கைதிகள் தாக்கியதால் சிறையில் மரணமடைந்தார். டேவிட் ஐயா மட்டக்களப்பு சிறை உடைப்பின் போது தப்பி இந்தியாவுக்குச் சென்று முதுமை காரணமாக இந்தியாவில் மரணமடைந்தார். சத்ததியார் புளொட் இயக்கத்தில் உள் இயக்க முரண்பாடு காரணமாக கொலை செய்யப்பட்டார்.
ரெலொ இயக்கமும் புலிகள் இயக்கமும் மலையக மக்கள் தொடர்பான கொள்கை நிலைப்பாடுகள் எவற்றையும் முன்வைத்ததாகத் தெரியவில்லை பிற்காலத்தில் புலிகள் இயக்கம் மலையக அரசியல் சக்திகளோடு உறவுகளைப் பேணுவதிலும் அக்கறை காட்டியது. மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனோடு அதிக உறவு இருந்தது எனலாம.; புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளி ஒருவரை பாதுகாத்ததற்காக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் , உப தலைவர் வி.டி. தர்மலிங்கம், செயலாளர் காதர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமாதான காலத்தில் மலையகத் தலைவர்களையும் புலிகள் இயக்கம் வன்னிக்கு அழைத்து உரையாடல்களை நடாத்தியது. சந்திரசேகரன், ஆறுமுகம் தொண்டமான், மனோகணேசன் ஆகியோர் வன்னிக்கு அழைக்கப்பட்டு உரையாடல் இடம் பெற்றது.
மலையக மக்கள் தொடர்பான விடுதலை இயக்கங்களின் அக்கறை பற்றி பல விமர்சனங்கள் இருக்கின்றன ஆனாலும் அதன் நேர்மைத்தன்மை பற்றி எவரும் கேள்வி கேட்க முடியாது.
அடுத்த வாரம் வடக்கு – கிழக்கு விவகாரங்களில் மலையக மக்களின் அக்கறை எவ்வாறு இருந்தது என்பதைப் பார்ப்போம்