கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் வடமராட்சி கிழக்கில் மணற்காட்டிலிருந்து தாளையடி வரையான பிரதேசத்தில் 18 காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக
senok wind power நிறுவனம் அதிதீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வடமராட்சி கிழக்கின் குறிப்பாக அம்மன், மணக்காடு, குடத்தனை, போன்ற கிராமங்களின் கிராம மட்ட அமைப்புகளோடு பிரதேச செயலக அதிகாரிகள் செனொக் வின்ட் பவர் நிறுவன பிரதிநிதிகள் தலமை கிராம அலுவலர் தலமையில் குறித்த கிராம மக்களோடு கலந்துரையாடினர்.
இதில் பிரதேச மக்கள் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் எந்த விடயங்களும் எமக்குத் தெரியாது என்றும் அது தொடர்பில் நாம் துறை சார்ந்தவர்களுடன் உரையாடி ஓர் முடிவுக்கு வருவதற்கு கால அவகாசம் வழங்குமாறு கேட்டிருந்தார்கள்.
இந் நிலையில் அதற்கு பின்னர் எந்தவிதமானதொரு ஒன்று கூடலோ சந்திப்புகளோ குறித்ய கிராம மக்களோடு மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதற்கு சமூகமளுக்குமாறு மணக்காடு தொடக்கம் தாளையடி வரையான கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச நிர்வாகம், வடமராட்சி கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு சென்ற அழைப்பு விடுக்கப்பட்ட கிராம மட்ட அமைப்புகளின் பிரதி நிதிகளை கள ஆய்வில் மட்டும் பங்கு கொள்ளுமாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதில் குறித்த பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் எவரும் ஈடுபடாத நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றிருந்த மத்திய சுற்றாடல் அதிகார சபையினுடைய அதிகாரியாக தன்னை அறிமுகம் செய்தவர் அவர்களை திருப்பி அனுப்பியிருக்கின்றார்.
இந்நிலையில் சில மணி நேரம் தாமதித்துச் சென்ற ஒரு சமூக மட்ட அமைப்பு தலைவரை இங்கே அரச உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் மட்டுமே இடம்பெறுகிறது. இதில் நீங்கள் பங்கு கொள்ள முடியாது என்றும் அவரை வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கிராமமட்ட அமைப்பினுடைய தலைவர் பிரதேச செயலாளரினுடைய அழைப்பின் பெயரில் தான் நான் இங்கே வந்திருந்தேன். இதனால் நாங்கள் வெளியேற முடியாது.
வெளியேறுவது என்றாலும் பிரதேச செயலாளரே சொல்லவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதேச செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதமும் காண்பிக்கப்பட்டு ஏன் அழைப்பு விடுக்கப்பட்டது என கோரப்பட்ட நிலயயயில் அவர் வெளியேறாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கூட்டம் நிறைவடைந்த பின்னர் அரச திணைக்களின் அதிகாரிகள் கள ஆய்வு ஒ மேற்கொள்வதற்காக சென்றிருந்தார்கள்.
இது இவ்வாறிருக்க பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் வடமராட்சிக் கிழக்கில் ஏன் இவ்வளவு இரகசியமாக இந்த திட்டம் மேற்கொள்வப்படுவதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.
இதனால் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது
இதைவிட கிராம மட்ட அமைப்புகள் பல சேர்ந்து ஒரு சில தினங்களில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்த இருப்பதாக தங்களுடைய பெயர்களை குறிப்பிட வேண்டாம் என்று பல சமூகம் மட்டும் அமைப்பு தலைவர்கள் எமக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவும் இல்லை, அது தொடர்பில் எந்த விதமான உரையாடல்களும் இடம்பெறாத நிலையில் ஏன் இவ்வாறு இரகசியமான முறையில் பிரதேச செயலாளரால் இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது பலத்த சந்தேகமான விடயமாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் போது
மக்கள் அதனை அமைக்க வேண்டாம் என்று பல்வேறு காரணங்களை கூறி பல நாள் போராட்டங்களை மேற்கொண்டும் அவர்கள் மிரட்டப்பட்ட நிலையிலே குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுரு ப்பதையும் அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக யாழ்ப்பாணம் தென்மராட்சி மறவன்புலவில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் நிலையங்களுக்கு பிரதேச மக்கள் பலத்தை எதிர்ப்பை ஒன்றிணைந்து வெளிக்காட்டியிருந்த நிலையில் அவர்கள் அடக்கப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்படும் அவர்கள் தண்டிக்கப்பட்டே அந்த காற்றாலை மின் உஉற்பத்தி நிலையங்கம் அமைக்கப்பட்டுருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி தலமையில் இடம் பெற்ற கூட்த்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கனிய வளங்கள் மற்றும் புவி சரிதவியல் மற்றும் சுரங்க திணைக்கள், கடற்படை வின்ட பவர் நிறுவனம்உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்