
பளை இத்தாவில் பகுதியில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய எம்பெருமாள் குமரவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.