லெஹான் ரத்வத்தேயினால் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம் – கரவெட்டியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் (33 வயது) என்ற கைதியொருவரே இந்த சம்பவத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் கடந்த 2009ஆம் ஆண்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தற்போது சூடுபிடித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் லொகான் ஆர்வத்தை தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யாதிருந்தார்.
இருந்த போதிலும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சினை மாத்திரமே அவர் இராஜினாமா செய்துள்ள போதிலும் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சு தொடர்ந்தும் லொஹான் ரத்வத்தே வசமே இருப்பதாகவும், அவர் உடனடியாக அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் கருத்துக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.