
மூதூர் பெரியவெளி , மணற்சேனை கிராமத்தில் கடந்த 1986.ம் ஆண்டு ஆடி மாதம் பதினாறாம் திகதி இம்பெற்ற 44. பெயரது மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாள் நேற்று மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும் உயிரிழந்த பொதுமக்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றிய அஞ்சலி நிகழ்வும். ஏற்பாட்டுக் குழுவினால் முன்னெடுக்கப்டிருந்து.
நிகழ்வில் தமிழரசிக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ .சுமந்திரன் கலந்தது பொதுச்சுடரினை ஏற்றி வைத்ததுடன். இலங்கையின் வடக்கு, கிழக்கில் இதே ஆண்டில் தமிழ் மக்களை இலக்குவைத்து இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் பல்வேறு கிராமங்களில் இடம்பெற்றிருந்தமை தொடர்பான நினைவுரையினையும் நிகழ்த்தியிருந்தார்.
பூசை நிகழ்வில் உயிர்நீத்தவர்களின் உறவுகள்,பொதுமக்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுக்களின் உறுப்பினர்கள், பல்வேறு சங்கங்களின் அங்கத்தவர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.