மதுபானம் மற்றும் புகைத்தல் வரி அதிகரிக்க ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணை நிறைவேற்றம் …..!சாவகச்சேரி பிரதேச சபை அதிரடி தீர்மானம்.

உணவுப் பொருட்களுக்கு விலை குறைப்பு செய்வதோடு,  மதுபானம் மற்றும் புகைத்தல் வரி அதிகரிக்க ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணை இன்று சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மக்களி அன்றாட பாவனைக்கு தேவையான பொருட்களின் வரி அறவீடு அதிகரிக்கப்பட்டு விலை அதிகரிப்பும் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் மதுபானங்கள் மற்றும் சிகரெட்டின் விலைகள் இதுவரைக்கும் வரியும் அதிகரிக்கப்படவில்லை,  விலைகளும் அதிகரிக்கப்படவில்லை என்று சாவகச்சேரி பிரதேச சபை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்  ஜெகதாஸ் தெரிவித்ததோடு அதனை பிரேரணையாக சாவகச்சேரி பிரதேச சபையில் இன்றையதினம் முன்வைத்துள்ள நிலையில் இன்று அது ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக 2019ஆம் ஆண்டு ஒரு சிகரெட்டின் விலை 65 ரூபாவாக இருந்த சிகரட் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டிலும் அதே விலையான  65 ரூபாவாகவே காணப்படுகின்றது என்றும் மக்களுடைய அன்றாடம் பாவனையிலுள்ள பொருட்களுக்கு விலைகளை அதிகரித்த நிலையில். சிகரெட்டிற்கான வரி அறவீடு அதிகரிக்கப்படவும் இல்லை விலையினை அதிகரிக்கப்படவில்லை.
எனவே ஒரு சிகரெட்டிற்கான விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டால் அரசாங்கத்திற்கு 52 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைக்கும். அதன் ஊடாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க முடியும். ஆகவே அதிமேதகு சனாதிபதி அவர்களிடம் மதுபானம் மற்றும் சிகரெட்டின் வரியை அறவீடு அதிகரித்து விலை அதிகரிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட வேண்டும். இவ்வாறு வரி அறவீடு அதிகரிக்கப்பட்டு விலை அதிகரிக்கப்படுவதனால் சிகரெட் பாவனையாளர்களை குறைப்பதோடு நோய்களில் இருந்தும் பாதுகாக்கலாம்  என்ற பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews