
அமரர் நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்களின் 2வது நினைவுதினத்தை முன்னிட்டு, “விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த இரத்ததான முகாமானது யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நேற்றையதினம் (16) காலை 8.30 தொடக்கம் மாலை 3.30 வரை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது பல குருதிக் கொடையாளர்கள் தன்னார்வ ரீதியில் வருகை தந்து இரத்ததானத்தை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விதையனைத்தும் விருட்சமே அமைப்பினர் கடந்த காலங்களில் பல்வேறு சமூக செயற்பாடுகளையும் பல இரத்ததான முகாம்களையுள் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.