தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா…!

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள, தங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையருகே ஆடிப்பிறப்பு தின விழா இன்று காலை நடைபெற்றது.
 தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.எஸ்.சிவஞானராஜா அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தங்கத் தாத்தாவின் சிலைக்கு மலர் சாற்றி, தங்கத் தாத்தா இயற்றிய “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே” என்ற பாடல் பாடி, சூடம் ஏற்றி ஆடிக்கூழ் பரிமாறி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை இயற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews