
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் உலருணவுப் பொதிகள் விநியோகம்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கமானது, அற்றார் அழிபசி தீர்த்தல் என்ற திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.


அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் அடங்கிய இப்பொதிகளைக் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அப்பகுதிகளுக்குச் சென்று வழங்கிவைத்துள்ளார்.
ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்கள் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.