
மண்டைதீவு கிழக்கு ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 4 பரப்பு காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக இன்றையதினம் அளவீடு செய்யப்போவதாக நில அளவை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.







இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணியின் உரிமையாளர், பொதுமக்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அவ்விடத்தில் கூடி தமது எதிர்ப்பை வெளிக்காட்டி போராட்டம் செய்வதற்கு தயாராக இருந்தனர்.
இந்நிலையில் நில அளவை திணைக்களமமானது இன்றையதினம் 17.07.2023 அவ்விடத்திற்கு வருகை தரவில்லை.
பல போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ந்தும் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு, தனியாரின் காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.