
36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.


வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரின் 13 வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான கடிதத்தினை, யாழ். இந்திய துணைத் தூதரிடம் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.
குறிப்பாக இணைந்த வடகிழக்கில் அமைந்த மாகாணசபையில் ஒன்றரை வருடங்கள் மாத்திரமே மக்கள் பிரதிநிதிகள் பங்கு பற்றினர்.
பிரிந்த வடக்கு மாகாணத்தில் ஐந்து வருடம் மாத்திரம் செயற்பாட்டில் இருந்தது அந்த காலத்திலும் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை அதிகாரங்களில் சில தடைகள் இருந்தாலும் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்ற கவலை நமக்குள்ளது என்றார்.