
ஏ-9 நெடுஞ்சாலை, ஆனையிறவு பகுதியில் நாட்டப்பட்டிருந்த மரக் கன்றுகளுக்கு விசமிகள் தீ வைத்ததில் அவை தீயில் கருகியுள்ளன.



தன்னார்வ அமைப்பொன்றினால் வீதியின் இருமருங்கிலும் நடப்பட்டு பராமரிப்புச் செய்யப்பட்டுவந்த மரக்கன்றுகளில் 28 மரக்கன்றுகளுக்கே இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு தீ வைத்து அழித்துள்ளனர்.
இயற்கை வளங்கள் அழிவுற்று வரும் நிலையில் மனிதர்களுக்கு பல்வேறுபட்ட நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த நோய்த்தாக்கங்களில் இருந்து மனிதர்களை பாதுகாப்பதில் மரங்கள் அளப்பரிய பங்காற்றுகின்றன.
மரங்கள் நாட்டப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி, அதனை ஊக்குவித்து வருகின்ற நிலையில், இவ்வாறான ஒரு செயற்பாடானது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.