
வடக்கு மாகாண கல்வி அமைச்சில் ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி வீதியில் உள்ள கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன கலந்து கொண்டதோடு, சிறப்பு விருந்தினராக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் ஆறு திருமுருகன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர், பாடசாலை மாணவர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு, நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு ஆடிக் கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பன வழங்கி வைக்கப்பட்டன.

