ஹேரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்த போது அவரிடம் இருந்து 35,000 ரூபா பணம் புடுங்கி எடுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் அதனை நீதிமன்ற பீ.அறிக்கையில் சமர்பிக்காமலும், பொலிஸ்காவல் பொருட்கள் பதிவேட்டு புத்தகத்திலும் பதிவிடாமல் தன் பொக்கெற்றுக்குள் போட்ட சம்பவம் நேற்றைய தினம்(16) யாழ்ப்பாணம் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியினை சேர்ந்த இளைஞன் நேற்றையதினம்(15) இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் 2கிராம் 170 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் புலணாய்வு பொலிஸாரினால் கொழும்புத்துறை பகுதியினை சோந்த இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அந்த இளைஞன் கைது செய்யப்படும் போது முச்சக்கரவண்டி திருத்துவதற்கு வைத்திருந்த 35,000 ரூபா பணத்தை பொலிஸார் பறித்தெடுத்து கொண்டுள்ளனர். நேற்றையதினம்(16) நீதிமன்றில் இளைஞன் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்ககமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
அத்துடன் இளைஞன் தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸார் தன்னிடம் இருந்து 35,000 ரூபா பணத்தை புடுங்கி எடுத்து கொண்டதாகவும், அந்தவிடயம் இந்த நீதிமன்ற அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்தலியனகே அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளனர்.