
யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது கணவர் மற்றும் 7 வயது மகளுடன் வாடகை அடிப்படையில் அங்கு வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் தொடர்ந்து தகராறுகள் இருந்து வந்துள்ளது.
இந்நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த பெண்ணின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பெம்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.