
வேலணை பிரதேச செயலகத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு (+94 21 222 9974) தொடர்பு கொண்டு அவசர சேவைகளை பெற்றுக் கொள்ளவும், தகவல்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.
சமூக மட்டங்களில் நடைபெறும் வன்முறைகள் மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத நடவடிக்கைகள் குறித்து செயற்படும் முக்கிய அரச நிறுவனங்களில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் முன்னணி வகிக்கின்றன. அவசர முறைப்பாடுகள், அறிவிப்புகள் மேற்கொள்வதற்கு அவற்றின் தொலைபேசி அழைப்புகள் இன்றியமையாதவை ஆகும்.
அந்தவகையில் வேலணை பிரதேச செயலகத்திற்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும்போது, தொலைபேசி மறு முனையில் அழைப்பினை பெற்றுக்கொண்டவேளை (answers) ஒரு மணி ஒலியுடன் 5,6 வினாடிகளில் அழைப்பு துண்டிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தொலைபேசி அழைப்பு திட்டமிட்டு துணடிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தொலைபேசி மூலம் வழங்கும் சேவையினை சீராக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.